Wednesday, May 14, 2014

உணவு அட்டவணை





Food Habits : Diet Table - Food Habits and Nutrition Guide in Tamil
உணவே மருந்து - மருந்தே உணவு என்கிற பழமொழிக்கேற்ப இன்றைய அவசர உலகில் நாம் நமது உடலுக்கு ஏற்ற உணவு வகைகளைச் சாப்பிடாமல் ஏதோ கடனுக்கு என்று நமது விருப்பப் படி சாப்பிடுவதாலும் நேரத்திற்குச் சாப்பிடாமல் கண்டபடி சாப்பிடுவதாலும், நமது உடலுக்கு ஏற்காத உணவு வகைகளை நாக்கிற்கு ஆசைப்பட்டு சாப்பிடுவதாலும் நமது உடல் நோய் எதிர்ப்புச் சக்தியைத் தானாகவே இழந்துவிடுகிறது. இதனால் எளிதில் நமது உடம்பை சாதாரண நோய் முதல் தீராத நாட்பட்ட நோய்கள் தாக்கி நோய் உண்டாக்கி விடுகின்றன.
நாமும் அவசரத்திற்கு தகுந்த காரணத்தை ஆராயாமலும், அதற்கு உண்டான நல்ல மருத்துவரை நாடாமால் நாமே மருந்துக்கடைக்குப் போய் நமது பிரச்சினைகளைக் கூறி மருந்து மாத்திரை வாங்கி சாப்பிடுவதால் நோய் சில சமயம் குணமாவதைப் போலத் தெரிந்தாலும் மீண்டும் நோய் எதிர்ப்புச்சக்தி இல்லாத காரணத்தினால் நமது உடம்பை நோய் தாக்குகிறது. ஒவ்வொருவரும் நேரத்திற்கும் அதுவும் அவரவருக்கு ஏற்ற உணவு வகைகளை உண்டுவந்தால் நோய் எளிதில் நம்மைத் தாக்க முடியாது.
ஒரு வாரத்திற்கு உணவு முறைகளை வகைப்படுத்திக் கூறியுள்ளேன். நோய் வாய்ப்பட்டவர்களும், சாதாரணமானவர்களும் இந்த முறையைக் கடைப்பிடித்து சாப்பிட்டு வந்தால் இதன் உண்மையை உணரலாம்.
திங்கட்கிழமை
காலையில் எழுந்து வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கவேண்டும். எவ்வளவு அதிகமாகத் தண்ணீர் குடிக்கிறீர்களோ அவ்வளவு உடம்பு நன்றாக இருக்கும். இதனால் உடல் சூடு தணியும். மலம் இளக்கமாக போகும். தேகம் சம நிலை அடையும்.
பின்னர் ஏழு மணிக்கு அருகம்புல் சாறு ஒரு டம்ளர் குடிக்க வேண்டும். மூன்று மணிக்கு சுக்கு, கொத்தமல்லி கலந்து காபி குடிக்கலாம். பதினோறு மணிக்கு பச்சைக் காய்கறிகள் கலந்த சாலட் அல்லது பேரிச்சம்பழம் ஐம்பது கிராம் அல்லது திராட்சை நூறு கிராம் அல்லது வாழைப்பழம் இரண்டு சாப்பிடலாம். மதியம் ஒரு மணிக்கு ஒன்று அல்லது இரண்டு கப் சாதம், ஒரு கப் ஏதாவது கீரை, இரண்டு கப் வேகவைத்த காய்கறிகள், இரண்டு டம்ளர் மோர், இரண்டு பேரிச்சம் பழம் மட்டும்.
மாலை நான்கு மணிக்கு கொண்டைக் கடலை அல்லது மொச்சை வேகவைத்தது ஒரு கப், அத்துடன் ஒரு டம்ளர் சுக்கு காபி. இரவு ஏழு மணிக்கு ஒன்று அல்லது இரண்டு கோதுமை சப்பாத்தி. ஒன்று அல்லது இரண்டு வாழை அல்லது பேரிச்சம் பழம், சிறிதளவு தேங்காய்த் துண்டு.
செவ்வாய்க்கிழமை
வழக்கம்போல தண்ணீர் குடிக்க வேண்டும். காலை ஏழு மணிக்கு எலுமிச்சம் பழம், இஞ்சி, தேன் கலந்த சாறு ஒரு டம்ளர் குடிக்கலாம். ஒன்பது மணிக்கு கேழ்வரகுப் புட்டு, வாழைப் பழம் அல்லது வேறு ஏதாவது ஒரு பழம், பதினோறு மணிக்கு கேரட்சாறு ஒரு டம்ளர் மட்டும். மதியம் ஒரு மணிக்கு ஒன்று அல்லது இரண்டு கப் சாதம், வாழைத் தண்டு, முருங்கைக் கீரை ஒரு கப், மிளகு ரசம் மற்றும் ஏதாவது ஒரு பழம் சாப்பிடலாம்.
மாலை நான்கு மணிக்கு எள், ஏலக்காய், வெல்லம் கலந்த எள் உருண்டை இரண்டு மற்றும் ஒரு கப் காய்கறி சூப். இரவு ஏழு மணிக்கு ஒன்று அல்லது இரண்டு கப்சாதம், வெந்தயக் குழம்பு அல்லது சீரகக் குழம்பு, இரவு படுக்கப் போகும் முன்பு பப்பாளி அல்லது மாம்பழச்சாறு ஒரு டம்ளர் குடிக்கலாம்.
புதன் கிழமை
வழக்கம்போல தண்ணீர் குடிக்க வேண்டும். காலை ஏழு மணிக்கு ஒரு டம்ளர் வேப்பிலை சாறு, மிளகு, சீரகம் கலந்து சாறு குடிக்கலாம். ஒன்பது மணிக்கு பைன் ஆப்பிள் சாறு அல்லது எலுமிச்சம் பழச்சாறு ஒரு டம்ளர் குடிக்கலாம். மதியம் ஒரு மணிக்கு ஒன்று அல்லது இரண்டு கப் சாதம், மிளகு ரசம், அகத்திக் கீரை, சுண்டைக்காய் கூட்டு, மாலை நான்கு மணிக்கு ஒரு டம்ளர் பாகற்காய் சூப் குடிக்கலாம். இரவு ஏழு மணிக்கு எலுமிச்சம் சாதம் ஒன்று அல்லது இரண்டு கப், பீட்ரூட் பொறியல், பேரிச்சம் பழம் இரண்டு சாப்பிடலாம்.
வியாழக்கிழமை
வழக்கம்போல தண்ணீர் குடிக்க வேண்டும். காலை ஏழு மணிக்கு வெண் சணி சாறு ஒரு டம்ளர், ஒன்பது மணிக்கு வெண் பொங்கல் ஒரு கப், மிளகு, கறி வேப்பிலை துவையல். பதினோறு மணிக்கு ஏதாவது ஒரு பழம். மதியம் ஒருமணிக்கு ஒரு கப் கோதுமை சாதம், காய்கறி சாம்பார். பேரிச்சம் பழம் இரண்டு அல்லது ஏதாவது ஒரு பழம். மாலை நாலரை மணிக்கு வேக வைத்த சுண்டல் ஒரு கப் மற்றும் சுக்கு காப்பி, இரவு ஏழு மணிக்கு ஏதாவது ஒரு பழம், பப்பாளித்துண்டு ஒரு கப் மற்றும் ஒரு டம்ளர் பால் மட்டும்.
வெள்ளிக்கிழமை
வழக்கம்போல காலையில் தண்ணீர் குடிக்கவேண்டும். காலை ஏழு மணிக்கு துளசிடீ, ஒன்பது மணிக்கு வெந்தயம் கலந்த இட்லி- நான்கு. மல்லி சட்னி, வேகவைத்த காய்கறிகள் ஒரு கப், மதியம் ஒரு மணிக்கு பச்சை காய்கறிகள் இரண்டு கப், ஒரு கப் அவல் (தேங்காயு டன்), மாலை நாலரை மணிக்கு சுண்டல் ஒரு கப் அல்லது முளைகட்டின தானியம் ஒரு கப், ஒரு டம்ளர் கோதுமைப்பால், இரவு ஏழு மணிக்கு இரண்டு சப்பாத்தி, காய்கறி வேகவைத்தது ஒரு கப், ஏதாவது பழம்.
சனிக்கிழமை
தண்ணீர். காலை ஏழு மணிக்கு இஞ்சி, நல்ல வெல்லம், ஏலக்காய் சேர்த்து காய்ச்சிய நீர் ஒரு டம்ளர். ஒன்பதுமணிக்கு பழத்துண்டுகள் கலந் தவை இரண்டு கப், மதியம் ஒரு மணிக்கு ஒரு கப் சாதம் அல்லது இரண்டு கோதுமை சப்பாத்தி, வேகவைத்த காய்கறிகள் ஒரு கப், மோருடன் வெங்கா யம் ஊறவைத்தது ஒரு டம்ளர், அவரைக்காய், வாழைப் பொறியல் அல்லது கூட்டு, மாலை நான்கு மணிக்கு சாத்துக்குடி தேன் கலந்த சாறு ஒரு டம்ளர். இரவு ஏழு மணிக்கு ஏதாவது ஒரு பழம், துளசி குடிநீர் ஒரு டம்ளர் அல்லது பட்டினி இருக்கலாம்.
ஞாயிற்றுக்கிழமை
வழக்கம்போல தண்ணீர். காலை ஏழு மணி - அருகம்புல், வேப்பிலை, தேன் கலந்த சாறு ஒரு டம்ளர், ஒன்பது மணிக்கு கேரட் சாறு ஒரு டம்ளர், காலை பதினோறு மணிக்கு கார அவல் ஒரு கப், இனிப்புப் பழங்கள் இரண்டு கப், காய்கறி சாலட் ஒரு கப், தேங்காய், பேரிச்சம்பழம் கலந்து சாப்பிடலாம். மாலை நான்கு மணிக்கு ஒரு சப்பாத்தி, காய்கறி ஒரு கப், ஏதாவது ஒரு பழம். இவ்வாறு அறுசுவை உணவுகளை உண்டுவந்தால் வாதம், பித்தம், கபம் சமநிலையிருந்து நோய்வராமல் நோய் எதிர்ப்புச்சக்தி தானாகவே கிடைக்கும். அசைவ உணவு சாப்பிடுகிறவர்கள் மீன் வகைகளை வாரம் ஒருமுறை சாப்பிடலாம். கோழிக்கறி, இறால் மீன், கருவாடு வகைகள் உடம்பிற்கு சூட்டை ஏற்படுத்தி நோய் வர வழிவகுக்கும். அதை தவிர்ப் பது உடம்பிற்கு நல்லது.

மூட்டு வலிக்கு இயற்கை மருத்துவம்


மரம் வாழ்ந்த பின்பு பலகையாகிறது. சந்தன மரம் மட்டும் வாழ்ந்தபின்பும் சந்தனமாகவே இருக்கிறது. ஒப்பற்ற மனித சமுதாயம் மட்டும் வாழும் போதே மூட்டுவலியால் முக்கி, முனங்கி இயக்கம் தடைப்பட்டு மூலையில் ஏன் முடங்க வேண்டும்.


உடல் பருமன் அடைவது போல், இதயமும், மூட்டும் பெரிதாவதில்லை. எனவே அதிக உடல் எடையால் அடிக்கடி மூட்டு வலியால் அவதிப்படும் அன்பர்கள். (நெல்லி, வெண்ப+சனி, கொள்ளு சூப், சாப்பிட வலி குறையும்) நரம்பு பிடிப்பால் சிதைந்து வரும் மூட்டு வலியை முருங்கையும் முடக்கற்றானும் சரி செய்யும்.


முறையான தூக்கம், சாந்தி ஆசனம், தியானம், நல்ல இசை, வழிபாடு முதலியவைகளால் அருமையான மனநலம் பெற்று பிட்ய+ட்டரி சுரப்பிகள் சிறப்பாக இயங்கச் செய்யலாம். குளிர்காலத்தில் உடல் சூடு குறைவதானலும் நரம்புகள் பிடிப்பும், தசை இறுக்கம் மிகுவதாலும் வேர்வை சுரப்பிகள், தோல் சுருங்குவதாலும் மூட்டுக்களின் தரையில் வேலை செய்தாலும், உட்கார்ந்தாலும், படுத்தாலும் மூட்டு வீக்கம், வலி, வளையும் தன்மை அதாவது முடக்குவதாகும் உண்டாகிறது.


பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனையால் இரத்த சோகையால் வந்த மூட்டு வலியை மாதுளையும், பேரீட்சையும் சரிசெய்யும். கால்சியம் குறைவால், எலும்பு மஜ்ஜை குறைவால் ஏற்படும் வலியை கீரைச் சாறுகள். முந்திரி, கோஸ், முருங்கை, உணவில் சேர்த்து சரிசெய்யலாம். வாயுப் பிடிப்பால் விளைத்திடும் மூட்டு வலியை போக்க ப+ண்டு சூப், வெங்காய பச்சடி அருந்த வேண்டும்.


மூட்டுவலி பெருக சில காரணி உணவுகள்:
அதிய அளவு காபி, டீ அருந்துதல்

அதிக அளவு எண்ணெய் உணவுகள் சாப்பிடுதல்

கடல் உப்பு, உணவில் அதிகம் சேர்த்தல்

வெள்ளைச் சீனி சேர்த்த இனிப்புகள், பானங்கள் எடுத்தல்

அசைவ உணவு

மொச்சை, பட்டாணி, தட்டைபயறு, உருளை

பதப்படுத்திய இரசாயன குளிர்பானங்கள் எலும்புகளை உருக்கி சிதைத்து விடுகின்றன.

மன உளைச்சல், மனபயம், மன சோர்வுகளால் தூக்கமின்மை ஏற்பட்டு பிட்ய+ட்டரி சுரப்பிகளின் இயக்கம் சீர்குலைந்தால் மூட்டு வலி அதிகரித்திட வாய்ப்புகள் உண்டு.


எளிய தீர்வுகள்
மூன்றுநாள் உபவாசம் (அ) பழச்சாறு நோன்பு 30 நாட்களுக்குள் மூட்டுவலி விரட்டிவிடும்.

தினமும் மூன்று நிமிட முழங்கால் விரல்களில் கொடுக்கும் பயிற்சி.

தினமும் மூட்டுகளைச் சுற்றி ஈரத்துணியால் பட்டி போட்டால் 30 நாளில் குணமாகும்.

இரவு நேர மண்ப+ச்சும், மண்பட்டியும் பகல் நேர மூட்டு வலியை போக்கும்.

எண்ணெய் இல்லாத உணவுகள் எவ்விதமூட்டிவலியையும் போக்கும்.

வெள்ளைப+ண்டு, முடக்கற்றான், மூட்டு வலியை ஒட ஒட விரட்டும்.

வஜ்ஜிராசனம், பத்மாசனம், உட்கடாசனம், தாளாசனமும் கருடாசனம், பாதங்குஸ்தாசனம், படகு ஆசனம், விருச்சிகாசனம் முதலிய ஆசனங்கள் செய்தபின் சாந்தி ஆசனம் செய்து வந்தால் மூட்டுவலி உடலை விட்டு ஓடிவிடும்.

காலை, மாலை, கனி உணவு உண்பார் கடும் மூட்டு வலியாயினும் கலங்கிடார்.

என்றும் இளமையோடு வாழ

நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது. உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன. நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சித்தர் எளிய வழியை கூறுகிறார். ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார் திருமூலர். கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும். "பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலானது என்று கருதுகின்றனர் சித்தர்கள்.

கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது. கடுக்காயின் சுவை துவர்ப்பாகும். நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும். எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும். நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு. துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும். ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும். பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது? அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம். கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.

கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்:

கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய். இதை பற்றி சித்தர் கூறும் பாடல்... "காலை இஞ்சி கடும்பகல் சுக்கு மாலை கடுக்காய் மண்டலம் உண்டால் விருத்தனும் பாலனாமே.- காலை வெறும் வயிற்றில் இஞ்சி- நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம். எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம். கடுக்காய் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிஷமாகும்.